20 மி. பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலி

மதுவிலக்கை ஆதரித்து நேற்று பீகார் மாநிலத்தில் 11,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனிதர்கள் கைகோர்த்தனர். மாநிலத்தில் மது ஒழிக்கப் பட்டதை ஆதரித்து உலகின் மிக நீண்ட மனிதச் சங்கிலி நடைபெறு வதாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலாளர் அஞ்சனி குமார் சிங் தெரிவித்தார். நேற்று பிற்பகல் 12.15 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற மனிதச் சங்கிலி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை இணைத்தது. ஆண்கள், பெண்கள், குழந் தைகள், ஆசிரியர்கள், மாணவர் கள், அரசு ஊழியர்கள், கிராம மக்கள் என்று கிட்டத்தட்ட 20 மில்லியன் பேர் இதில் பங்கேற்ற தாக அதிகாரிகள் தெரிவித்தனர். 38 மாவட்டங்கள் வழியாக மனிதச் சங்கிலி வரிசை ஊடுருவி இருந்ததாக ஊடகங்கள் குறிப்பிட் டன.

மொத்தம் 11,292 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்த மனிதச் சங்கிலியைப் படம் பிடிக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் இரண்டும் வெளிநாட்டு செயற்கைக்கோள் ஒன்றும் பயன்படுத்தப்பட்டன. மேலும் நான்கு விமானங்கள், இரு ஹெலிகாப்டர்கள், 40 ஆளில்லா பறக்கும் கருவிகள் முதலியனவும் இந்த நிகழ்வைப் படம்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்சிப் பாகுபாடின்றி ஆளும் கட்சியினரோடு எதிர்த்தரப்பு பாஜக வினரும் ஒன்றாகக் கைகோர்த்து நின்றனர்.

38 மாவட்டங்கள் வழியாக நீண்டிருந்த மனிதச் சங்கிலியில் அரசியல் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பி னரும் பங்கேற்றனர். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!