கவச வாகனங்கள் பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் வந்து சேரும்

சிங்கப்பூர் ஆயுதப்படைகளுக்குச் சொந்தமான ஒன்பது கவச வாக னங்களை விடுவிப்பது என்று ஹாங்காங் முடிவு செய்து இருக் கிறது. இந்த முடிவு சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் நில வும் நல்ல, தோழமை உறவுகளைப் பிரதிபலிப்பதாக தற்காப்பு அமைச் சர் இங் எங் ஹென் தெரிவித் திருக்கிறார். ஹாங்காங் அதிகாரிகள் அந்த டெரெக்ஸ் காலாட்படை கவச வாகனங்களை விடுவித்ததும் அவற்றை சிங்கப்பூருக்கு கொண்டு வரப்போவதாக கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஏபிஎல் உறுதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். கவச வாகனங்கள் விரைவில் ஹாங்காங்கை விட்டு புறப்பட்டு விடும் என்றும் அவை சீனப் புத் தாண்டுக் கொண்டாட்டத்தின் கடைசி நாளை சிங்கப்பூரில் கொண்டாடும் வகையில் இங்கு வந்து சேர்ந்துவிடும் என்றும் நம்பப்படுவதாக டாக்டர் இங் சொன்னார்.

சீனப் புத்தாண்டு கொண்டாட் டத்தின் கடைசி நாள், புத்தாண்டு பிறந்து 15வது நாள் இரவில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி இந்த நாள் வருகிறது. கவச வாகனங்களை ஹாங் காங்கிலிருந்து ஏற்றிக்கொண்டு வழியில் எங்கும் நிற்காமல் நேரடி யாக சிங்கப்பூருக்கு வந்துவிடப் போவதாக ஏபிஎல் நிறுவனம் உறுதி கூறியிருப்பதாகத் தெரி வித்த அமைச்சர், இந்தப் பய ணத்திற்கு சுமார் ஒரு வார காலம் பிடிக்கும் என்றார். இதற்கிடையே, ஹாங்காங் அதிகாரிகள் தங்களுடைய புலன் விசாரணைகளை முடித்து இருப்ப தாகவும் கவச வாகனங்களை ஏபிஎல் நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்ப அவர்கள் இணங்கி இருப்பதாகவும் பிரதமர் லீ சியன் லூங்கின் கடிதத்திற்கு அளித்த பதிலில் ஹாங்காங்கின் தலைமை நிர்வாக அதிகாரி லியுங் சுன் இங் குறிப்பிட்டு இருப்பதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சீனப் புத்தாண்டு கடைசி நாளுக்கு முன் டெரெக்ஸ் கவச வாகனங்கள் ஹாங்காங்கிலிருந்து நேரே சிங்கப்பூர் வந்து சேரும். படம்: தற்காப்பு அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!