கோயிலில் களைகட்டிய சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

வில்சன் சைலஸ்

கண்கவர் நடனங்கள், அறுசுவை சைவ உணவு, ஆரஞ்சு பழங்கள், 'ஹொங் பாவ்' அன்பளிப்பு என முதியோர் இல்லங்களில் உள்ள வர்களுடன் சீனப் புத்தாண்டை இந்த ஆண்டும் கொண்டாடி மகிழ்ந்தது சவுத் பிரிட்ஜ் சாலை யில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயம். நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள். ஏறக்குறைய 140 முதியோர். 'நாங்கள் இருக்கிறோம்' என்ற ஆறுதலைத் தரும் நோக்கில் 14வது ஆண்டாக இந்தக் கொண்டாட்டத்தை இந்த இந்துக் கோயில் தனது வளாகத்தில் ஏற்பாடு செய்தது. இம்மாதம் 21ஆம் தேதி நடந்த இக்கொண்டாட்டத்தில் ஆலயத்தின் பல்வேறு தொண் டூழியக் குழுக்களும் ஒன்றி ணைந்து மூத்தோருடன் அள வளாவின. முதியோர் பயன்படுத் தக்கூடிய பொருட்கள் நிறைந்த பைகள் அவர்களுக்கு அன்பளிப் பாகக் கொடுக்கப்பட்டன. வேப்பிலைக் குழு, பெண்கள் தொண்டர் குழு, சன்னிதித் தொண்டர்கள், அரவான் தொண் டர்கள் எனக் கோயிலைச் சேர்ந் தோர் மூன்றாவது ஆண்டாக 'மேகி' நூடல்ஸ், பால், பற்பசை, பல் தூரிகை, துண்டு, பிஸ் கட்டுகள் போன்ற பொருட்களை மனமுவந்து வாங்கிக் கொடுத் தனர்.

"விருந்தில் கலந்துகொண்ட மூத்தோருக்குச் செய்யும் சேவை யைப் பெற்றோருக்குச் செய்யும் சேவையாகவே நான் கருது கிறேன்," என்றார் கடந்த 20 ஆண்டுகளாக ஆலயத்தில் தொண்டூழியராகச் சேவையாற் றும் திருமதி வசந்தகுமாரி. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் திரு மெல்வின் யோங், இந்துக் கோயிலில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுவது சிங்கப்பூருக்கே உரிய தனித்துவம் என்று குறிப்பிட்டார்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் திரு மெல்வின் யோங், இந்துக் கோயிலில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுவது சிங்கப்பூருக்கே உரிய தனித்துவம் என்று குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!