பொருளியல் மீட்சி: பிரதமர் நம்பிக்கை

சீனப் புத்தாண்டை சிங்கப்பூர் கொண்டாடி வரும் வேளையில் நாட்டின் பொருளியல் கடந்தாண்டு இறுதியில் அடைந்த மீட்சியை இந்த ஆண்டிலும் தொடரும் என்று பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் தயாரிப்புத் துறையில் ஏற்பட்ட மீட்சி காரணமாக எதிர் பார்ப்புகளை மீறி பொருளியல் 1.8 விழுக்காடு வளர்ந்தது.

சில ஊழியர்கள் தங்களது வேலை நிலவரம் பற்றி அக்கறை கொள்வது பற்றி செய்தியாளர்க ளிடம் குறிப்பிட்ட பிரதமர், அரசாங்கம் ஆட்குறைப்பை மட்டும் கண்காணிக்கவில்லை என்றும் மக்களுக்கு மறுவேலை கிடைக் கிறதா, அவர்கள் வேலைகளைப் பெறுகிறார்களா என்பனவற்றிலும் ஒட்டுமொத்த வேலைகளின் எண் ணிக்கை உயர்ந்துள்ளதா என்பதிலும் கவனம் செலுத்துகிறது என்றார்.

செனோகோ மின் நிலையத்தில் சீனப் புத்தாண்டு பொதுவிடுமுறை தினத்தன்று பணியாற்றிய ஊழியர் களைச் சந்தித்த பிரதமர் லீ, அவர்களுடன் 'செல்ஃபி' எடுத்துக்கொண்டார். அருகில் பிரதமரின் மனைவி திருவாட்டி ஹோ சிங் (வலக்கோடி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!