சிங்கப்பூர்-இந்தோ. எல்லை வரையறை பத்திரப் பகிர்வு

சிங்கப்பூரின் கிழக்கு நீரிணையில் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக் கும் இடையிலான கடல் எல்லை வரையறை நடப்புக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பான இணக்கப் பத்திரங்களை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடியும் பரிமாறிக்கொண்டனர். இந்தப் பத்திரப் பகிர்வு சடங்கு நேற்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சில் நடைபெற்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு இரு நாடுகளும் கையெழுத்திட்ட ஒப்பந் தத்தில் சிங்கப்பூரின் சாங்கிக்கும் இந்தோனீசியாவின் பாத்தாமுக்கும் இடைப்பட்ட 9.5 கிலோ மீட்டர் நீளத் திற்கு அந்த எல்லைக்கோடு அமை கிறது. இந்த ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் இந்தோனீசிய நாடாளு மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட் டது. இரு நாடுகளுக்கும் இடை யிலான அதுபோன்ற மூன்றாவது ஒப்பந்தம் அது.

இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி நேற்று இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேசினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!