தமிழக தலையெழுத்தை மாற்றிய இறுதித் தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றியிருக்கிறது. அதிமுகவில் இரு அணி களாகப் பிரிந்துள்ள தற்போதைய பொறுப்பு முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவுக் கும் இடையே முதல்வர் பதவியை யார் கைப் பற்றுவது என்ற பரபரப்பான சூழ் நிலையில் தீர்ப்பு வெளியாகி யிருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடிக்கு சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா, வி.கே. சசிகலா, இளவரசி, சுதா கரன் ஆகிய நால்வருக்கும் கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கு ரூ.10 கோடி அப ராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு உறுதி செய்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!