காரை நசுக்கிய சிமெண்ட் மூட்டைகள்

காகித சிமெண்ட் மூட்டைகள் விழுந்ததால் வெஸ்ட் கோஸ்ட்டில் கார் ஒன்றின் பின்பகுதி நொறுங் கியது. கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2, புளோக் 727ல் உள்ள கார் நிறுத்துமிடத்தில் நேற்று முன் தினம் காலை 10 மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில், வெள்ளி நிற டொயோட்டா கார் ஒன்றின் மீது சிமெண்ட் மூட்டை கள் சரிந்து விழுவதைக் காண முடிந்தது. ஒவ்வொன்றும் சுமார் 40 கிலோ எடை கொண்ட பல மூட்டைகள் விழுந்து காரை நசுக் கியதாக 'வான்பாவ்' செய்தித்தாள் குறிப்பிட்டது. காரின் பின்னிருக்கைக்கு மேல் உள்ள கூரை முழுமையாக நசுங்கி சேதமுற்றது. அதிர்ஷ்டவசமாக காரினுள் யாரும் இல்லை. காருக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பாரந்தூக்கி லாரியின் பாரமேற்றும் கருவியில் இருந்து 40 மூட்டைகள் வரை விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாக வான் பாவ் தெரிவித்தது.

கார் மீது விழுந்த சிமெண்ட் மூட்டைகளை அப்புறப்படுத்த கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆனதாக நம்பப்படுகிறது. படம்: வான் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!