துவாஸ் பெருந்தீ 4 மணி நேரத்தில் அணைக்கப்பட்டது; உயிரிழப்பு இல்லை

துவாஸ் நச்சுக்கழிவு நிர்வாக ஆலையில் நேற்றுக் காலை மூண்ட பெருந்தீ நான்கு மணி நேரத்தில் அணைக்கப்பட்டதாக வும் சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. தீ எழுப்பிய அதிக வெப்ப வெளியேற்றத்தால் தீயணைப் பாளர்களில் ஒருவருக்கு இங் டெங் ஃபோங் பொது மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட் டது. 'எக்கோ ஸ்பெஷல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்' ஆலையில் ரசா யனக் கழிவு, தீப்பற்றக் கூடிய சாதனங்கள் ஆகியவை தொடர் பான இத்தீச்சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வரு வதாகவும் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. 23 துவாஸ் வியூ சர்க்யூட் பகுதியில் அமைந்துள்ள ஆலை யில் காலை நேரத்தில் தீப்பற்றி யதாகவும் அதுகுறித்து 6.15 மணியளவில் குடிமைத் தற் காப்புப் படைக்குத் தகவல் தெரி விக்கப்பட்டதாகவும் கூறப்பட் டது.

தீப்பற்றி எரியும் கழிவு நிர்வாக ஆலை. இதனருகே பணிபுரியும் முகமது டேனியல் என்பவர் காலை 7.04 மணிக்கு எடுத்த படம்.

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!