ரயில்சேவைக்கு புதிய இலக்கு

பெருவிரைவு ரயில் சேவையின் நம்பகத்தன்மைக்குப் போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் இவ்வாண்டு புதிய இலக்கை நிர்ணயித்திருக்கிறார். பெரிய அளவிலான தடங்கல் ஏற்படுவதற்கு முன் ரயில்கள் சராசரியாக 300,000 கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டும் என்பதே அந்த இலக்கு. சென்ற ஆண்டைவிட ரயில் சேவை 72% மேம்பட இது வழிவகுக்கும். சென்ற ஆண்டு, ஐந்து நிமிடங்களுக்கு மேலான தாமதங்களை எதிர்நோக்குவ தற்கு முன் ரயில்கள் சராசரியாக 174,000 கிலோமீட்டர் பயணம் செய்தன. சிங்கப்பூர் ரயில் சேவையின் நம்பகத்தன்மை "நாம் விரும்பும் நிலையை இன்னமும் அடையா விட்டாலும் எப்படியும் எட்டி விடும்," என்று போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவு குறித்து நாடாளுமன்ற விவாதத்தின் போது திரு கோ கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!