சமூகமே சேர்ந்து உருவாக்கிய பசுமைத் தோட்டம்

ப. பாலசுப்பிரமணியம்

1999ஆம் ஆண்டில் அமைக்கப் பட்ட 'ஆஷ்ரம்' போதையர் மறு வாழ்வு இல்லம் போதைப் புழக்கத் தால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்து அறக்கட்டளை வாரியத் தின் கீழ் செயல்படும் 'ஆஷ்ரம்' இல்லத்தில் உள்ளவர்களுக்காக பசுமைத் தோட்டத்தை அமைக்கப் போவதாக கடந்த ஆண்டு அறி விக்கப்பட்டது. அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தோட்டக்கலை நிபுணர்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங் கள், தனிநபர்கள், அரசாங்க அமைப்பு எனக் கிட்டத்தட்ட 90 தொண்டூழியர்கள் சேர்ந்து டர்பன் ரோட்டில் இயங்கிவரும் இவ்வில் லத்தில் பசுமைத் தோட்டத்தை உருவாக்கினர். இந்தப் பசுமைத் தோட்டத்தைப் போக்குவரத்து அமைச்சரும் செம் பவாங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான திரு கோ பூன் வான் நேற்று அதிகாரபூர்வமா கத் திறந்து வைத்தார். 

பசுமைத் தோட்டத்தைத் நேற்று திறந்து வைத்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (நடுவில் அமர்ந்திருப்பவர்), கம்பத்துச் சூழலை நினைவுபடுத்தும் பறவை வகைகளைப் பார்வையிடுகிறார். அவருடன் இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் திரு ஆர். ஜெயசந்திரன் (நடுவில் நிற்பவர்), 'ஆஷ்ரம'த்தின் தலைவர் டாக்டர் என். கணபதி ஆகியோர் (வலமிருந்து இரண்டாவது) உள்ளனர். படம்: 'ஆஷ்ரம்' போதையர் மறுவாழ்வு இல்லம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!