சிங்கப்பூர், வியட்னாம் பொருளியல் இணைப்புகள் பற்றி பிரதமர் லீ

விமானத் தொடர்பை வலுப்படுத்த கூடுதல் முயற்சி சிங்கப்பூரும் வியட்னாமும் தங்க ளுக்கு இடையிலும் அதற்கு அப்பாலும் விமானத் தொடர்பை வலுப்படுத்தக்கூடிய வழிகளை ஆராயும் என்றும் இதன்வழி இரு நாட்டுத் தொழிலும் பயனடையும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று கூறினார். விமானச் சேவைகளைத் தாரா ளமயப்படுத்தும் சாத்தியத்தை வியட்னாமியப் பிரதமர் நுயன் சுவான் பியுக்கிடம் எழுப்பியதாகத் திரு லீ தெரிவித்தார். ஏனெனில், இரு நாடுகளுக்கு இடையிலான அணுக்கமான உறவுக்கேற்ப விமானப் போக்குவரத்தும் துரித வளர்ச்சி அடைந்து வருகிறது. "விமானச் சேவை ஒப்பந்தத்தை மேம்படுத்தவேண்டும் என அவரி டம் கூறினேன். ஏனெனில் இதன் வழி விமானப் போக்குவரத்து மேலும் வளர்ச்சியடைந்து வர்த்தக மும் மேலும் விருத்தியடையும். அவர் அக்கருத்தை வரவேற்றதால், அந்நாட்டு அதிகாரிகளுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்து வோம். இவ்விவகாரத்தில் முன் னேற்றம் ஏற்படும் என நம்பு கிறேன்," என்றார் அவர். செவ்வாய்க்கிழமை தொடங்கிய நான்கு நாள் அதிகாரத்துவ வியட் னாமியப் பயணத்தின் கடைசி நாளன்று திரு லீ செய்தியாளர் களிடம் பேசினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!