காலாங் ஆற்றுப் பகுதிக்குப் புதுப்பொலிவு பெருந்திட்டம்

காலாங் ஆற்று வட்டாரத்தை வாழ்க்கைப்பாணி மையமாக்க பிரம்மாண்ட திட்டங்கள் தீட்டப்பட் டுள்ளன. நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று தொடங்கிய ஒரு கண்காட்சியில் அந்தத் திட் டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. காலாங் ஆற்று வட்டாரத்திற்குப் புதுப்பொலிவையும் புத்துயிரையும் அளிக்கும் வகையில் பரந்த அளவில் ஐந்து முக்கிய யோசனை கள் முன்வைக்கப்பட்டு இருக்கின் றன. "அதோ அது வழியாக ஓர் ஆறு ஓடுகிறது" என்ற ஆணை யத்தின் கண்காட்சி, காலாங் ஆற்று வட்டார மேம்பாடு பற்றிய கருத்துகளையும் யோசனைகளை யும் தெரியப்படுத்துமாறு பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறது. தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் அந்தக் கண் காட்சியைத் தொடங்கி வைத்தார். நகர மறுசீரமைப்பு ஆணையம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.

தீவு விரைவுச்சாலையில் குறுக்கு இணைப்புப் பாலமாக இப்படி ஒரு சுருள்வட்ட மேம்பாலத்தை அமைக்கலாம் என்று ஒரு யோசனை உள்ளது. இது, சைக்கிளோட்டிகள், மெதுவோட்டக்காரர்கள் விரைவுச்சாலையை வசதியாகக் கடக்க இது உதவும். படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!