வில்சன் சைலஸ், சுதாஸகி ராமன்
தேக்கா நிலையம் புதுப்பிப்புப் பணிகளுக்காக ஜூலை மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்பட இருக்கிறது. முதல் தளத்தில் செயல்படும் அனைத்து உணவுக்கடைகளும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை புதுப்பிப்பு பணிகளுக்காக இரு மாதங்களுக்கு மூடப்படும். ஈரச் சந்தை ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு மூடப்படும். இரண்டாம் தளத்தில் உள்ள ஆடை, ஆபரணக் கடைகள் அனைத்தும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு மூடப் படும். புதுப்பிப்புப் பணிகள் நடை பெறும் காலத்தில் தற்காலிகமாக கடைகள் செயல்படாது என்று தேக்கா நிலையக் கடைக்காரர் கள் தெரிவித்தனர். புதுப்பிப்புப் பணிகளுக்கான தேதிகளை உறுதிப்படுத்திய தஞ்சோங் பகார் நகர மன்றம், புதுப்பிப்புப் பணிகள் தொடர் பான விளக்கங்களையும் தமிழ் முரசிடம் தெரிவித்தது.
மின்விசிறிகள், புகை வெளியேற்றும் கருவிகள் அதிகம் இல்லாத உணவுக்கடைகள் உட்பட தேக்கா நிலையம் முழுமையும் புதுப்பிப்புப் பணிகளுக்காக ஜூலை மாதம் மூடப்படும். படம்: சுதாஸகி ராமன்