பாட்டுப் பாடி நிதி திரட்டிய அமைச்சர்

வில்சன் சைலஸ்

நிதி திரட்டு போன்ற நல்ல நோக்கத்திற்காகவும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம் என்ற சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா, தமிழிலும் இந்தியிலும் பாடி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மகிழ்வித்தார். 'ஹெண்டர்சன்=டாசன்' குடி மக்கள் ஆலோசனைக் குழு, இந்திய வர்த்தகத் தலைவர்களின் வட்டமேசை அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த நிதி திரட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நேற்று அவர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் $300,000த்திற்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டது. நிகழ்ச்சியின்மூலம் திரட்டப் பட்ட நிதியின் ஒரு பகுதி சிண்டா வின் 'ஸ்டெப்' துணைப்பாட வகுப்புகளுக்கும் பாலர் பள்ளி களின் 'லின்' திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும் என்ற சிண்டா வின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா, "உதவித் தேவைப்படுவோரிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நிதியின் ஒரு பகுதி பயன்படுத் தப்படும்," என்றார்.

ஹெண்டர்சன் - டாசன் தொகுதியின் வசதி குறைந்த குடும்பங்களுக்கும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமான சிண்டாவிற்காவும் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியில் 'வான் மேகம்' என்ற தமிழ்ப் பாடலையும் இந்தி மொழிப் பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார் அமைச்சர் இந்திராணி ராஜா (இடது). உடன் அவருடைய பாட்டுக்கு இசையமைத்து மகிழ்ந்த பிரபல இசையமைப்பாளர் முகம்மது ரஃபி. படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!