உட்லண்ட்ஸ் பேட்டை உருமாற்றம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 'நம் மையநகர் மறுஉருவாக்கச் செயல்திட்டத் தின்' மூன்றாவது கட்டத்தின்கீழ், 1,198 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ள உட்லண்ட்ஸ் குடியிருப்புப் பேட்டை அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் தலைகீழாக உருமாறுகிறது. பெரிய, புதிய வீடமைப்புத் திட்டங்கள், நடையர், சைக்கிள் ஓட்டிகளுக்கு இணைப்பு வழிகள், மார்சிலிங்கில் பெரிய பரப்பளவில் பொழுதுப்போக்கு வசதிகள் எல்லாம் அந்த வட்டார மக்களுக்குக் கிடைக்க இருக்கும் புதிய வசதிகளில் அடங்கும். உட்லண்ட்ஸ் மையநகர் மறுஉருவாக்கத் திட்ட கண்காட்சி நேற்று தொடங்கியது. தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் அப்போது உட்லண்ட்ஸ் புதுப்பிப்புத் திட்டங்களை அறிவித்தார்.

உட்லண்ட்ஸ் சென்டரில் நேற்று நடந்த கண்காட்சியில் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், (நடு) தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (திரு கோவுக்கு வலது) முதலானோர். இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியைக் கண்டு மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இணையத்திலும் அவர்கள் யோசனைகளை முன்வைக்கலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!