முன்னாள் அமைச்சர் ஒத்மான் வோக் மரணம்

சிங்கப்பூரின் முதல் அமைச்சரவையில் அங்கம் வகித்தவரும் நாட்டு நிறுவனர்களில் ஒரு வருமான திரு ஒத்மான் வோக் (படம்) தமது 92வது வயதில் காலமானார். சில காலமாக அவர் உடல்நலம் குன்றி இருந்ததாகத் தெரி விக்கப்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நேற்று பிற்பகல் 12.21 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகப் பிரதமர் அலுவலகம் தெரி வித்தது. திரு ஒத்மானின் நல்லுடல் சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படும். சடங்குபூர்வ பீரங்கி வண்டி அவரது நல்லுடலை சுல்தான் பள்ளிவாசலில் இருந்து புசாரா அபாடி முஸ்லின் இடுகாடு வரை சுமந்து செல்லும் என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறியது.

'ஒன்பீப்பிள்.எஸ்ஜி' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி நாளை புதன் கிழமை நிறைவுபெறும். அதுவரை எல்லா அரசாங்கக் கட்டடங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். 1963 முதல் 1981 வரை பாசிர் பாஞ்சாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு ஒத்மான், சமுதாய விவகாரங்கள், கலாசாரம் உள்ளிட்ட துறைகளுக்கான அமைச்சராகவும் செயலாற்றினார். பல இன மக்கள் ஒற்றுமையுடன் வாழும் நாடாக சிங்கப்பூரை உருவாக்கியதில் திரு ஒத்மானுக்குப் பெரும்பங்குண்டு.

அத்துடன், சமூக நலம், விளையாட்டு மேம்பாடு ஆகிய வற்றிற்காகவும் இவர் என்றென்றும் நினைவில் இருப்பார். "திரு ஒத்மான் பின் வோக்கின் மறைவை அறிந்து பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளதுடன் அவரது மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றனர்," என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது. ஆதரவாகத் திகழ்ந்த திரு ஒத்மான், திரு லீயின் நெருங்கிய தோழர்களில் ஒருவராகவும் விளங்கினார்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!