உள்ளூர் ஓடும் குழு மன்னிப்பு கேட்டுக்கொண்டது

‘சிலேத்தார் ஹேஷ் ஹவுஸ் ஹேரியர்ஸ்’ எனும் உள்ளூர் ஓடும் குழு உட்லே எம்ஆர்டி நிலையத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பேக் கிங் மாவு அச்சுறுத்தல் சம்பவத்துக் காக நேற்று மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அந்தக் குழு நேற்று மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில், இச்சம்பவம் மூலம் பொது மக்க ளையும் சம்பந்தப்பட்ட அமைப்பு களையும் பீதியடையச் செய்ததற் காக தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டது. “செவ்வாய்க்கிழமை பிற்பகலில், எங்கள் குழுவிலிருந்து மூவர் உட்லே எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே மூன்று, நான்கு இடங் களில் பேக்கிங் மாவைச் சிறிதளவு கொட்டியிருந்தார்கள். அது அன்று மாலை எங்கள் குழுவினர் எம்ஆர்டி சுரங்கப் பாதையைப் பயன்படுத்தி பிடாடாரியிலிருந்து உட்லே குளோசை நோக்கிச் செல் வதற்காக அப்பர் சிராங்கூன் ரோட்டைக் கடக்க அவை தடயக் குறிப்புகளாக இருக்கும் என்று கருதியிருந்தார்கள்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந் தது.

மூன்று, நான்கு இடங்களில் ஓடும் குழுவினர் போட்ட மாவுத் தடயங்கள் பெரும் பீதியை ஏற்படுத்தின. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்