தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் வருமானத்தைப் பெருக்கியுள்ள சிறிய வர்த்தகமான மினிமார்ட்

பெரிய பேரங்காடிகள், விரைவு உணவுக் கடைகள் மட்டுமின்றி, இப்போது சிறிய மினிமார்ட் கடைகள்கூட வாடிக்கை யாளர்கள் சுயமாகப் பணம் செலுத்தக்கூடிய சாதனங்களை அறிமுகப்படுத்தி சிங்கப்பூரின் உற்பத்தித்திறன் முன்னேற்றத் திற்குத் துணை புரிகின்றன. இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தும் முதல் சில மினிமார்ட் கடைகளில் ஒன்று சௌத் பொனவிஸ்தா சாலையில் அமைந்துள்ள 'ஃபூட்-ஜாய்' கடை. வாடிக்கையாளர்கள் சுய மாகப் பணம் செலுத்தக்கூடிய சாதனங்கள் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் இக்கடையில் அறிமுகமாயின. ஸ்பிரிங் சிங்கப்பூரின் ஆற்றல் மேம்பாட்டு மானியத் தின் ஆதரவுடன் சாதனங்களில் கடை முதலீடு செய்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாவது சாதனம் வாங்க தீர்மானித்தது. இச் சாதனங்கள் ஒவ்வொன்றும் $50,000க்கு மேல் விலை யானவை. இந்தச் சாதனங் களுடன், ஒவ்வொரு வாடிக்கை யாளரும் வரிசையில் காத்தி ருக்கும் நேரம் மூன்று நிமிடங் களிலிருந்து ஒரு நிமிடமாகக் குறைந்தது. இதனால், அன்றாட விற்பனை பரிவர்த் தனைகளின் எண்ணிக்கை சுமார் 15% அதிகரித்ததாகக் கடையின் பொது மேலாளர் எஸ். ஜானகிராமன் கூறினார்.

வாடிக்கையாளர்கள் சுயமாகப் பணம் செலுத்தக்கூடிய சாதனத்தைச் செயல்படுத்தும் முறையை அமைச்சர் ஈஸ்வரனுக்கு விளக்கும் ஃபூட்-ஜாய் கடையின் பொது மேலாளர் எஸ்.ஜானகிராமன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!