மலேசிய இந்தியர் திட்டம் தொடக்கம்

மலேசியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை’ பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று தொடங்கிவைத்தார். அந்தத் திட் டத்தில் இடம்பெறும் முக்கிய அம்சங்களில் பெரும்பாலானவை அடுத்த 10 ஆண்டு களில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் உறுதி கூறினார். மலேசிய இந்திய சமூகத்தை முன் னேற்றுவதற்கான விரிவான ஆய்வு நடந்து முடிந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டவற்றைச் செயலாக்க வேண்டிய நேரம் இப்போது வந்திருப்பதாக வும் திரு நஜிப் குறிப்பிட்டார். “இப்பெருந்திட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும். இந்தத் திட்டம் நிறை வேற்றப்படும். இது அரசியலை மனதில் கொண்டு இடம்பெறும் ஒன்று அல்ல,” என்று அவர் தெரிவித்தார். “இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் உத்திரவாதம் அளிக் கிறோம்,” என்று உரக்கப் பிரகடனப்படுத் திய பிரதமர், ‘நாளை நமதே’ என்று பல தடவை தமிழில் முழங்கினார்.

புத்ரா வணிக மையத்தின் தேவான் மெர்டேக்கா மண்டபத்தில் நேற்று மலேசிய இந்தியர் பெருந்திட்ட தொடக்க நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் நஜிப் உள்ளிட்டோர். படம்: ‘த ஸ்டார்’