பொழுதுபோக்கு வசிப்பிடமாக மாறும் பாசிர் ரிஸ் நகரம்

பாசிர் ரிஸ் நகரம் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் மாற் றங்கள் ஏற்படுத்தப்பட்ட பிறகு, கடற்கரைக்குப் பக்கத்தில் 'பிக் னிக்' பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துவது என்பது மிகவும் எளி மையாக அமையும். வீட்டிலிருந்து 'பிக்னிக்' நிகழ்ச் சிக்காகச் செல்லும்போது வீட்டிலி ருந்து பொருட்கள் பலவற்றை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. மாறாக, பாசிர் ரிஸிலிருந்தும் அதற்கு அருகிலிருந்து செல்லும் மக்கள் எம்ஆர்டி நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள பற்பல கடைகளி லிருந்து 'பிக்னிக்' நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்துப் பொருட்க ளையும் வாங்கிக் கொண்டு, போக்குவரத்து விளக்குகள் அற்ற கூரையுடன் கூடிய நடைபாதையில் உல்லாசமாகச் சுமார் பத்து நிமிடம் நடந்து கடற்கரையை அடையலாம். ஒருவேளை நடப்பதற்குக் களைப்பாக இருந்தால், பசுமைப் பாதையில் உள்ள சைக்கிளுக்கான பாதையில் சைக்கிளிலும் சென்று ஐந்து நிமிடங்களில் கடற்கரையை அடையலாம். பாசிர் ரிஸ் நகர மையத்துக்கும் பாசிர் ரிஸ் பூங்காவுக்கும் இடைப் பட்ட 1.2 கிலோமீட்டர் பசுமைப் பாதை வீவகவின் கோஸ்டா ரிஸ் வீடமைப்புத் திட்டக் கட்டுமானத் தளத்துக்குப் பக்கத்தில் உள்ள தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கு அருகில் முடிவுறும்.

பாசிர் ரிஸ் நகர மையத்தையும் பாசிர் ரிஸ் பூங்காவையும் நேரடியாக இணைக்கும் புதிய மத்திய பசுமைப் பாதையின் மாதிரி வரைபடம் படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!