வேலையின்மை உயர்வை தடுக்க கடின உழைப்பு

பொருளியல் மேம்பட்டு வரும் நிலையில் வளப்பத்துடன் நீடிக்க வேலைகள் தொடர்பாக சிங்கப் பூர் மூன்று உத்திகளைக் கடைப் பிடிக்க வேண்டியுள்ளதாக பிர தமர் லீ சியன் லூங் தெரிவித் துள்ளார். புதிய வேலைகளை உரு வாக்குவதில் வர்த்தக நிறுவனங் களுக்கு உதவுதல், வேலையிழக் கும் ஊழியர்களை மாற்று வேலை களில் அமர்த்துதல், ஊழியர்கள் தங்களது வேலைகளில் முன்னேற் றம் காண பயிற்சி அளித்தல் ஆகியன அந்த மூன்று அம் சங்கள் என்று திரு லீ தமது வருடாந்திர மே தின உரையில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறந்த நிலையில் இவ்வாண்டின் மே தினம் கொண்டாடப்பட்டு வருவதாகக் கூறிய அவர், சிங் கப்பூரின் பொருளியலுக்குச் சிக் கல் ஏற்படும் நிலை பற்றியும் எச் சரித்தார். "நமது பொருளியல் பெரும்பா லும் வர்த்தகம் சார்ந்ததாகவே உள்ளது. வர்த்தகப் போர் வெடிக் குமானால், அது நம்மை நேரடி யாகத் தாக்காமல் பிற நாடுகளின் பொருளியலைத் தாக்குவதாகவே இருப்பினும் அதனைச் சமாளிக்க நாம் தயாராக இருத்தல் வேண் டும்," என்றார் பிரதமர். 'தெம்பனிஸ் ஹப்'பில் நடை பெற்ற மே தின பேரணியில் சுமார் 1,500 தொழிலாளர் இயக்கத் தலைவர்கள் மத்தியில் திரு லீ உரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 2.3 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. அதுபற்றி குறிப்பிட்ட பிரதமர், இதர முன்னேறிய நாடு களோடு ஒப்பிடுகையில் இந்த விகிதம் குறைவுதான் என்றார். வேலையின்மை விகிதம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும் நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "நிலவரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம் வேலையின்மையை தடுத்து நிறுத் தவும் நமது ஊழியர்கள் வேலை யில் தொடர்ந்து நீடிக்கவும் நாம் கடுமையாக உழைத்தாக வேண் டும்," என்றார்.

'தெம்பனிஸ் ஹப்'பில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நடத்திய மே தின பேரணி நிகழ்ச்சி களைப் பார்வையிடும் பிரதமர் லீ சியன் லூங், அவரது துணைவியார், துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் மற்றும் அமைச்சர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!