‘வலுவான கடற்படை அவசியம்’ வர்த்தகத்தை நம்பியிருக்கும் தீவு

நாடான சிங்கப்பூருக்கு வலுவான கடற்படை அவசியம் என்று சிங்கப்பூர் கடற்படையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார். "நாம் உலகத்தோடு வர்த்தகம் செய்ததால் கடல் நமது உயிர் நாடியாக இருந்தது = இன்னமும் இருக்கிறது. நமது இறையாண்மை யைப் பாதுகாக்கவும் கடல்வழி மிரட்டல்களிலிருந்து தற்காக்கவும் நமக்கு உயிரூட்டும் வர்த்தகத் தைக் கட்டிக்காக்கவும் வலுவான கடற்படை நமக்குத் தேவைப்பட் டது," என்று அவர் கூறினார்.

சாங்கி கடற்படைத் தளத்தில் வெள்ளைச் சீருடைகள் அணிந்த கடற்படை அதிகாரிகளின் கௌரவ காவற்படை அணியின் வரவேற்புக் குப் பிறகு பிரதமர் லீ பேசினார். சிங்கப்பூரின் முன்னோடிகள் இதைப் புரிந்துகொண்டிருந்ததால் தான் 1965ல் சுதந்திரம் கிடைத்த வுடன் கடற்படையை நிர்மாணிக்க முழுமுனைப்புடன் முற்பட்டனர். வெறும் இரண்டு மரக் கப்பல்கள், கடற்படை தலைமையகமாகப் பயன்படுத்த நங்கூரமிடப்பட்ட 3வது கப்பல் ஆகியவற்றுடன் தான் கடற்படை தொடங்கியது. "நமது முன்னோடிகளிடம் தொழில்நுட்பமும் வளங்களும் போதிய அளவு இல்லாத போதி லும் மனஉறுதி, திறமையான செயல்பாடு ஆகியவற்றுடன் அதை ஈடுசெய்தனர்," என்று 1,700 முன்னாள், தற்காலக் கடற் படை அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

சிங்கப்பூர் கடற் படையின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி புதிய 'ஆர்எஸ்எஸ் இண்டிபெண்டன்ஸ்' போர்க்கப்பலின் வெள்ளோட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்). அப்போது, பிரதமர் லீ, துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (பிரதமருக்கு வலப் புறம்), தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (பிரதமருக்கு இடப்புறம்) ஆகியோர் உடன் இணைந்து அந்தப் போர்க் கப்பலின் கடற்படை அதிகாரிகள் தம்படம் எடுத்துக்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!