‘மகளிரின் தேவைக்கேற்ப மாற்றங்கள் அவசியம்’

தற்காலப் பெண்களின் மாறிவரும் தேவைகள், விருப்பங்கள் ஆகிய வற்றுக்கு ஏற்ப மக்கள் கழகத்தின் மகளிர் செயற் குழுக்கள் மாற்றம் காண வேண்டும் என பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். மக்கள் கழகத்தின் மகளிர் செயற்குழுக்கள் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டிய கொண்டாட்ட நிகழ்ச்சி யில் நேற்று கலந்துகொண்ட பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மகளிருக்கான துணைக் குழுவானது நாட்டு நிர்மாணத் தின் ஆரம்ப காலத்தில் 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சமையற்கலை, தையற்கலை போன்ற திறன்களைப் பெண்கள் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இந்தக் குழு அமைக்கப்பட்டது. காலத்துக்கேற்ப மாற்றங் களைக் கண்டு தற்போது சமூகப் பிணைப்பை மேம்படுத்துதல், பெண்களின் ஆற்றலை மேம் படுத்துதல், உதவி தேவைப் படுபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுதல் போன்ற செயல்பாடு களில் பெண்களை ஒருங் கிணைத்து பல நடவடிக்கை களை மகளிர் செயற்குழு இப்போது நடத்தி வருகிறது. இல்லத்தரசி, பராமரிப்பாளர் என்பது போன்ற வழக்கமான செயல்பாடுகளுக்கு அப்பால் பல பெண்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப வாழ்க்கைத் தொழில்களை மேற்கொண்டு உள்ளனர் என்றார் திரு லீ.

மக்கள் கழக மகளிர் செயற் குழுவின் 50வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிரதமர் லீ சியன் லூங் அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்