வாழ்நாள் கற்றலில் கவனம் செலுத்தும் 6வது தன்னாட்சி பல்கலைக்கழகம்

சிங்கப்பூரில் தனிச்சிறப்புமிக்க கவனத்துடன் ஆறாவது தன் னாட்சி பல்கலைக்கழகம் அமைக் கப்படுவதற்கு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதலளித்தது. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) என்று அழைக்கப் படவுள்ள அதன் முன்னாள் பெயர் சிம் பல்கலைக்கழகம். வாழ்நாள் கற்றலை ஊக்குவிக் கும் இந்தப் பல்கலைக்கழகம் வலு வான சமூக முக்கியத்துவத்துடன் பாடங்களை வழங்குவதால் இது சிங்கப்பூரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கும்.

வகுப்பறையில் கற்றவற்றை யதார்த்த சூழலில் பயன்படுத்துவதை வலுவாக்க தொழில்துறைகளுடன் இந்தப் பல்கலைக்கழகம் பணியாற்றும் என்று கல்வி அமைச் சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் எஸ்யுஎஸ்எஸ் மசோதாவை வெளியிட்டபோது நேற்று மன்றத்தில் இதனைத் தெரிவித்தார். இந்தச் சட்டம் தனியார் சிம் பல்கலைக்கழகத்தைக் கல்வி அமைச்சின் பார்வைக்குக் கீழ் கொண்டுவரும். மாணவர் தொகுதி ஒவ்வொன்றிலும் பல் கலைக்கழகத்திற்குச் செல்லும் விகிதாச்சாரத்தை 2020க்குள் 40 விழுக்காட்டுக்கு உயர்த்த அரசாங் கம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் என்று அவர் கூறி னார். இவ்வாண்டு அந்த விகிதம் 35 விழுக்காட்டை எட்டும். இரு ஆண்டுகளுக்கு முன்பு அது 30 விழுக்காடாக இருந்தது.

சிங்கப்பூரின் ஆறாவது தன்னாட்சி பல்கலைக்கழகமாகிறது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்