இளையர்கள் நீச்சல் கற்றிருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை

சிங்கப்பூர் இளையர்கள் நீச்சல் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகளில் உயிர் காத்துக்கொள்ளும் திறன்கள் பெற்று இருப்பதை உறுதி செய்ய இன்னும் அதிகம் செய்யப்படவேண்டும் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தி இருக்கிறார். ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே கடலில் மூழ்கி முகம்மது சுஹைமி செபஸ்டியன் எனும் 12 வயது மாணவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். நேற்று அவரது துக்க அனுசரிப்பில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் திரு தர்மன் இவ்வாறு சொன்னார். "இந்தச் சோக நிகழ்வுக்காக மட்டு மல்ல, மிகவும் பயனுள்ள வாழ்வியல் திறன் என்பதாலும் நல்ல உடலியல் நடவடிக்கை என்பதாலும் நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும்," என்று துணைப் பிரதமர் தெரிவித்தார். மூன்று மணி நேரத் தேடுதலுக்குப் பின் சுஹைமியின் உடல் பிடோக் படகுத்துறை அருகே கண்டெடுக்கப் பட்டது. ஹோ சிங் ரோட்டில் உள்ள சுஹைமியின் தாத்தா வீட்டில் நேற்று நடந்த துக்க அனுசரிப்பு நிகழ்வில் அவர் படித்து வந்த ஜூரோங்வில் உயர்நிலைப் பள்ளித் தோழர்கள், அவர் முன்னர் படித்த லேக்சைட் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த நண்பர்கள், உற வினர்கள் என 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கடலில் மூழ்கி உயிரிழந்த உயர்நிலைப் பள்ளி மாணவன் முகம்மது சுஹைமி செபஸ்டியனின் துக்க அனுசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, அவருடைய நண்பர்களுக்கு ஆறுதல் கூறும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (இடமிருந்து 2வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!