பிரதமர் லீ: குடும்பங்களின் தூண்களே அன்னையர்

அன்னையர் குடும்பங்களின் தூண்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள அனைத்து அன்னையருக்கும் தாயாகப் போகும் பெண்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார். "அன்னையர் நமது குடும்பங் களின் தூண்கள். அம்மாவாக இருப்பது சிரமமிக்க வேலைகளில் ஒன்றாகும். இன்றைய கால கட்டத்தில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைப் பேணி வளர்க் கின்றனர். அதுமட்டுமல்லாது, வேலைக்கும் செல்கின்றனர். இன்றைய தாய்மார்கள் தங்களது வயதான பெற்றோரைப் பார்த்துக் கொள்கின்றனர். சிலர் ஒற்றைப் பெற்றோராகவும் இருக்கின்றனர்," என்று திரு லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தாய்மார்களுக்குப் புகழாரம் சூட்டினார்.

காலத்துக்கு ஏற்ப பொறுப்புகள் மாறினாலும் அன்னையரின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து வலுவாக இருப்பதாக அவர் கூறினார். "தலைவர்களாக, பராமரிப் பாளர்களாக, முன்மாதிரிகளாக அன்னையர்களின் பங்களிப்பைக் கொண்டாடுவோம். இன்றும் மற்ற நாட்களிலும் அன்னையருக்காக நேரம் ஒதுக்கி அவர்களிடம் உங்களது அன்பைக் காட்டுங்கள்," என்று பிரதமர் லீ கேட்டுக் கொண் டார். இதற்கிடையே, ஹவ்காங் அவென்யூ 8ல் நேற்றுக் காலை பிரதமர் லீ அங்கிருந்த அன்னை யருக்குப் பூங்கொத்துகளை அன்னையர் தினப் பரிசாக வழங்கினார்.

ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள காப்பிக்கடையில் அன்னையருக்குப் பூங்கொத்து கொடுக்கும் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!