சாங்கி விமான நிலையத்தில் தீ

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2ல் நேற்று மாலை தீ மூண்டது. முனையம் இரண்டின் பயணிகள் புறப்பாட்டுப் பகுதியில் தீ பற்றியதாக போலிஸ் தனது ஃபேஸ்புக் தளத்தில் மாலை 5.43 மணிக்கு அறிவித்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப் பட்டதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது. மாலை 5.40 மணிக்கு குளிரூட்டி குழாயில் இருந்து புகை கிளம்பியதை அடுத்து அங்கு தீ எச்சரிக்கை ஒலி ஒலிக் கத் தொடங்கியதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அங்கு விரைந்த விமான நிலைய அவசரகால சேவைக் குழு அங்கிருந்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு க் கொண்டு சென்றனர்.

பயணிகளில் இருவர் புகையால் ஏற்பட்ட சுவாசப் பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீப்பற்றியதற்கான காரணம் அறியப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தால் இரண்டாம் முனையம் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்ட தாகவும் விமான நிலையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மாலை 6.38 மணிக்கு அறிவித்திருந் தது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது. பயணிகள் தங்கள் விமானம், புறப்பாட்டு முகப்பு போன்ற விவரங் களை அங்குள்ள தகவல் திரைக ளி லும் நிலையத்தின் இணையத்த ளத்திலும் தெரிந்துகொள்ளலாம். பயணிகளுக்கு நேர்ந்த சிரமங்களுக்கு சாங்கி விமான நிலையக் குழுமம் வருத்தம் தெரிவித்துக்கொண்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!