தமிழோடு இணைவோம் முகாமில் முத்தமிழ் புழக்கம்

இயல், இசை, நாடகம் வழி யதார்த்தமான சூழலில் தமிழை எளிமையான முறையில் பயன்பாட் டிற்குக் கொண்டுவரும் நோக்கத் துடன் 'தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!" என்ற இரு நாள் முகாமை கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு கடந்த வார இறுதியில் அறுசுவையுடன் நடத்தியது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பைத் தமிழைக்கொண்டு வலுப்படுத்தும் நோக்கில் சூச்சின் உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச் சியில் 35 பெற்றோர்= பிள்ளைகள் ஜோடியாகக் கலந்துகொண்டனர். முழுமையாக தமிழிலேயே ஏற்பாடு செய்யப்பட்ட பலவகை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெற்றோ ரும் பிள்ளைகளும் குறிஞ்சி, முல்லை, மருதம் என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சிங்கப்பூரையும் உலக நிகழ்வு களையும் ஒட்டிய பொதுஅறிவு கேள்விப் புதிர்ப்போட்டியில் கேள்வி களுக்குத் தமிழில் பதிலளிக்க பெற்றோரும் பிள்ளையும் ஒருவருக் கொருவர் உதவினர். உள்ளூர் பாடகரான இர்ஃபானுல்லா, கருத்துள்ள தமிழ்ப் பாடல்களைத் தாளம், ராகம் தவறாமல் பாட கற்றுக் கொடுத்ததோடு வந்திருந்தோரு டன் பாடி மகிழ்வித்தார்.

முகாமில் பிள்ளைகள், வீட்டில் இருந்து பழம், காய்கறி களைக் கொண்டு வந்து பெற்றோர் உதவியுடன் புதுமையாக கலவை செய்தனர். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!