இஸ்தானா பற்றிய புதிய நடமாடும் கல்விப் பாதைகள் அறிமுகம்

வருகையாளர்கள் இனி இஸ் தானா பூங்காவையும் இஸ்தானா மரபுடைமைக் காட்சிக்கூடத்தை யும் நகர்ப்புற பகுதியில் முக்கிய இடங்களையும் சொந்தமாகவே சுற்றிப் பார்க்கலாம். புதிதாக அறி முகப்படுத்தப்பட்டுள்ள மூன்று நடமாடும் கல்விப் பாதைகள் அவ் வாறு செய்ய உதவும். ‘லோக்கோமோல்’ செயலியின் கீழ் நேற்று தொடங்கப்பட்ட இந்தக் கல்விப் பாதைகள், இஸ் தானாவை பற்றி மக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஓர் இடமாக்குவதில் கவனம் செலுத்தும். உதாரணத்திற்கு, இஸ்தானா மரபுடைமைக் காட்சிக்கூடப் பாதை, செயலியில் உள்ள இரு வழி தொடர்பு அம்சங்கள் மூலம் இஸ்தானாவின் வரலாற்றை எடுத்துக்கூறும். இஸ்தானா பூங்காவில் அமைந் துள்ள இந்தக் காட்சிக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருட்கள், அன் பளிப்புகள் போன்றவற்றைப் பற்றி வருகையாளர்கள் தெரிந்து கொள்ள இது உதவும். இஸ்தானா பூங்காவைச் சுற்றி யுள்ள தாவர வகைகளையும் உயி ரினங்களையும் வருகையாளர்கள் சுற்றிப் பார்க்க இஸ்தானா பூங்கா பாதை வகைசெய்யும்.

சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோஃப் இஷாக்கின் உருவச் சிலையைக் கையடக்க சாதனம் ஒன்றின் மூலம் சோதிக்கும் அதிபர் டோனி டான் கெங் யாம் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி

09 Dec 2019

டெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

தற்காப்புக்காக குற்றாவளிகளைத் தாங்கள் சுட்டதாகவும்  போலிசார் கூறினர். படங்கள்: ஊடகம்

06 Dec 2019

மருத்துவரை எரித்துக் கொன்ற அதே இடத்தில், கைதான நால்வரும் ‘என்கவுன்டர்’; கொண்டாடிய பெண்கள்