வாடிக்கையாளரைக் கவர புதுப்புது வழிகள்: அலங்கார மீன் துறையினர் மும்முர முயற்சி

சிங்கப்பூரில் அலங்கார மீன் வளர்ப்புத் தொழில்துறையைச் சேர்ந்த சிலருக்கு வர்த்தகச் சரிவு ஏற்பட்டிருக்கலாம். அதேவேளையில், அலங்கார மீன்களையும் மீன்வளர்ப்புச் சாத னங்களையும் விற்பனை செய்யும் வியாபாரிகள், புதிய வழிகளை நாடி பலரும் மீன் வளர்ப்புத் துறை யில் நாட்டம் கொள்ள வழிகாட்டி வருகிறார்கள். அவர்கள் புதிய வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள புதுப்புது வழிகளை நாடுகிறார்கள். அலங்கார மீன் வளர்ப்புத் துறையில் ஈடுபட்டிருக்கும் சிலருக் குத் தொழில் வாய்ப்புகள் இப்போது நல்ல நிலையில் இல்லை. கடந்த ஈராண்டுகளில் அலங்கார மீன்களுக்கான உள்நாட்டுத் தேவை 20% வரை குறைந்துவிட்ட தாக ரெயின்போ ஃபிஷ் இண்டர்ஸ்டிரிஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜோல் ஹோ தெரிவித்தார்.

இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இவர்கள் மலி வான பொருட்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள். இந்தத் தொழில்துறை தேக்கம் அடைந்திருந்தாலும் மக்கள் பொழுதுபோக்காக மீன் வளர்ப்பை நாடுவதாக சியான் ஹு கார்ப்ப ரேஷன் என்ற நிறுவனத்தின் துணை நிர்வாகி ஆன்டி யாப் கூறினார். வாடிக்கையாளர்கள் பலரும் சிறிய வகை மீன்களையும் சிறிய வகை தொட்டிகளையும் நாடுவ தால் அதற்கேற்ப தாங்கள் செயல் படுவதாகவும் இவர் தெரிவித்தார். அலங்கார மீன் வியாபாரிகள் தெமாசெக் பலதுறைத் தொழில் கல்லூரியில் நான்கு நாள் அலங்கார மீன் காட்சியை நேற்று முதல் நடத்துகிறார்கள்.

தெமாசெக் பலதுறை தொழிற் கல்லூரியில் அலங்கார மீன் 2017 கண் காட்சியைத் தொடங்கி வைத்த டாக்டர் கோ போ கூன் (இடது) பலவற்றையும் அங்கு பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்