சுடச் சுடச் செய்திகள்

ரயில் சேவை மீது நம்பிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூர் ரயில் சேவைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை மேம்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் பல தாமதங்களுக்கு இடையே எம்ஆர்டி கட்டமைப்பு 387,000 ரயில் கிலோ மீட்டர் தூரத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப் பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த 2016ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 387,000 ரயில் கிலோ மீட்டர் தொலைவை எம்ஆர்டி ரயில்கள் பூர்த்தி செய் திருந்தன. இந்த விவரங்களை இரண்டாம் போக்குவரத்து அமைச்சர் இங் சீ மெங் நேற்று வெளியிட்டார். கல்வி அமைச்சருமான அவர், கடந்த மார்ச் மாதம் தெங்காவில் ஜூரோங் வட்டாரப் பாதையின் பணிமனை அமையும் என்று அறிவித்திருந்தார். இந்தப் புதிய பணிமனை 2025ஆம் ஆண்டில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, ஜூரோங் புத்தாக்க வட்டாரம், ஜூரோங் தொழிலியல் பேட்டை, ஜூரோங் லேக் வட்டாரம் ஆகியவற்றை இணைக்கும் வகை யில் உருவாக்கப்படும். துவாஸ் மேற்கு ரயில் பாதை நீட்டிப்பு நாள்தோறும் 100,000 பயணிகளுக்கு சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் இங் சொன்னார். துவாஸ், ஜூரோங் தொழிற் பேட்டை ஆகியவற்றுடன் துவாஸ் மேற்கு ரயில் சேவை நீட்டிப்பு இரண்டு புதிய, நான்கு பழைய பேருந்து சேவைகளுடன் இணைக்கப்படும்.

மேலும் இந்த ரயில் சேவை விரிவாக்கத்தில் குல் சர்க் கிள், துவாஸ் கிரசெண்ட், துவாஸ் வெஸ்ட் ரோட், துவாஸ் லிங்க் ஆகிய புதிய ரயில் நிலையங்கள் இடம்பெறும். நிலப்போக்குவரத்து பெருந் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மேம்பாடுகள் இடம்பெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டில் ரயில் கட்டமைப்பை 360 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவுபடுத்துவதே இதன் நோக்கம். “இதனால் எம்ஆர்டி வசதி களுடன் வரும் ஆண்டுகளில் மேற்கு வட்டாரம் துடிப்புமிக்க வட்டாரமாக மாறுவதை எதிர் பார்க்கலாம்,” என்று இரண்டாம் போக்குவரத்து அமைச்சர் இங் சீ மெங் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon