மருத்துவர்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு: சட்டப்படி தேவையில்லை

சிங்கப்பூரில் மருத்துவர்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு சட்டப்படி தேவையான ஒன்று அல்ல என்று தெரிகிறது. அரசாங்கத் துறை மருத்துவர்கள் அனைவருக்கும் காப்புறுதிப் பாதுகாப்பு இருக்கிறது. இதனை அவர்கள் வேலை செய்யும் மருத்துவமனை உறுதிப்படுத்துகிறது. ஆனால் தனியார் துறையில் இந்த ஏற்பாடு இல்லை. மருத்துவர்கள் தங்களுடைய தொழில் சான்றிதழ்களைப் புதுப்பிக்கும்போது அல்லது அவற்றுக்கு அனுமதி கேட்கும்போது அவர்கள் காப்புறுதிப் பாதுகாப்பை எடுத்திருக்க வேண்டும். அவற்றைப் பராமரித்து வரவேண்டும் என்பதைக் கட்டாயமாக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்றாலும் இதனை இப்போதைக்குத் தான் அமல்படுத்துவதில்லை என்று சிங்கப்பூர் மருத்துவர்கள் மன்றம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஏதாவது தவறு நடக்கும்போது நோயாளிகளுக்கு எத்தகைய நிலைமை ஏற்படும் என்று கேட்டதற்குப் பதிலளித்த இந்த மன்றத்தின் பேச்சாளர், மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்களே காப்புறுதிப் பாதுகாப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். ஏதாவது பிரச்சினை என்று வரும்போது நோயாளிகள் மருத்துவரிடமிருந்து அல்லது மருந்தகத்திடமிருந்து இழப்பீடு கோரலாம் என்று அவர் விளக்கினார். மருத்துவர்கள் நொடித்துப்போனவர்களாக இருந்தால் அல்லது அவருடைய முதலாளிகளால் காப்புறுதிப் பாதுகாப்பு பெறாதவர்களாக இருந்தால் நோயாளிகள் ஒன்றும் செய்யமுடியாது என்று அந்தப் பேச்சாளர் விளக்கம் அளித்தார்.

குடும்பப் பிரச்சினை: பிரதமர் மன்னிப்பு மறைந்த தமது தந்தை லீ குவான் இயூவின் ஆக்ஸ்லி சாலை வீடு தொடர்பாகத் தமக்கும் தமது உடன்பிறப்புகளுக்கும் இடையி லான சர்ச்சைக்குப் பிரதமர் லீ சியன் லூங் நேற்று மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்தச் சர்ச்சையால் சிங்கப்பூ ரின் நன்மதிப்பும் அரசாங்கத் தின்மீது சிங்கப்பூரர்களுக்குள்ள நம்பிக்கையும் பாதிப்படைந்ததற்கு "ஆழ்ந்த வருத்தம்" அடைவதாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார். ஆயினும், தமது உடன்பிறப்பு களான டாக்டர் லீ வெய் லிங், திரு லீ சியன் யாங் இருவரும் முன்வைத்த ஆதாரமற்ற குற்றச் சாட்டுகள் பொதுப்படையாக மறுக் கப்படுவது அவசியம் என்று பிரதமர் நேற்று வெளியிட்ட அறிக் கையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம் ஜூலை 3ம் தேதி கூடும்போது, இந்தக் குற் றச் சாட்டுகளை மறுக்க அமைச் சர்நிலை அறிக்கை ஒன்றை வெளி யிடப்போவதாக அவர் தெரிவித் தார். நாடாளுமன்றக் கூட்டத்தின் போது மக்கள் செயல் கட்சிக் கொறடா விலக்கப்படும் என்றும் பிரதமர் லீ தெரிவித்தார். நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் "இவ்விவகாரத்தைத் தீர ஆராய வேண்டும்" என்று அவர் வலி யுறுத்தினார். "இவ்விவகாரத்தை நாடாளு மன்றத்தில் முழுமையாக வும் பகி ரங் கமாகவும் ஆராய்வதன் மூலம் சந்தேகங்கள் நீங்கி, நமது அமைப்புகள்மீதும் அரசாங் கத் தின்மீதும் நம்பிக்கை வலுப் படும் என்று நம்புகிறேன்," என் றார் திரு லீ. அவர் வெளியிட்ட அறிக்கை யின் தமிழாக்கம்: கடந்த ஒரு வாரத்தில், எனது உடன்பிறப்புகளுக்கும் எனக்கும் இடையிலான தனிப்பட்ட சர்ச்சை பற்றிய செய்தியால் சிங்கப்பூரர்கள் கலக்கமும் குழப்பமும் அடைந் தனர். இந்தச் சர்ச்சையால் சிங் கப்பூரின் நன்மதிப்பும் அரசாங் கத்தின்மீது சிங்கப்பூரர்களுக் குள்ள நம்பிக்கையும் பாதிப்படைந் த தற்கு ஆழ்ந்த வருத்தமடைகி றேன். உங்கள் பிரதமர் என்ற முறை யில், இதற்காக உங்களிடம் மன் னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

உடன்பிறப்புகளில் மூத்தவன் என்ற முறையில், எங்களது பெற்றோர்கள் உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு மனவேதனை அடைந்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்நிலையைத் தவிர்க்க சாத்தியமான அனைத்தையும் நான் செய்தேன். எண் 38, ஆக்ஸ்லி சாலையிலிருந்த சொத்தை எனக்குரிய சமபங்கின் ஒரு பகுதியாக என் தந்தை எனக்கு விட்டுச் சென்றார். ஆனால், என் உடன் பிறப்புகளுக்கு இது மகிழ்ச்சி யளிக்க வில்லை. இந்த விவகாரத் தைத் தனிப்பட்ட முறையில் கையாள முயன்றேன். எண் 38, ஆக்ஸ்லி சாலை வீட்டை வெறும் $1க்கு என் சகோதரிக்கு மாற்றித் தர முன்வந்தேன். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி யடைந்தது. பிறகு, நியாயமான சந்தை மதிப்பில் என் சகோதரரிடம் வீட்டை விற்று, அதன்மூலம் கிடைத்த அனைத்தையும் அறப் பணிக்கு நன்கொடையாகக் கொடுத்தேன்.

மேலும் : epaper.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!