சுடச் சுடச் செய்திகள்

நல்லிணக்கப் பேராளர் வீட்டு விருந்தில் அமைச்சர் புதுச்சேரி

நோன்புப் பெருநாளை முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் களிக்க வாய்ப்பு அளித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ‘SG Muslims for Eid’ எனும் திட்டம் ஒன்று. இதை முன்னிட்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய 27 வயது குமாரி நூர் மஸ்தூராவின் இல் லத்திற்குத் தொடர்பு, தகவல் அமைச்சு மற்றும் கல்வி மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகச் சென்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடினார். இஸ்லாமியர்கள் மீதுள்ள தவறான கண்ணோட்டத்தைக் களைவதற்கான ஒரு வழியாக இந்தத் திட்டம் அறிமுகம் கண்டது என்ற குமாரி மஸ்தூரா, இஸ்லா மியர்களைப் பிற சமயத்தினரும் இனத்தவரும் ஆழமாகப் புரிந்து கொள்ள இத்திட்டம் வகைசெய் கிறது,” என்றார்.

மஸ்தூராவின் வீட்டில் பலரும் வந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி யுற்றதாகக் கூறிய டாக்டர் ஜனில், சமய இன நல்லிணக்கம் முக்கிய மானது என்றும் மஸ்தூரா போன் றோர் இது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

‘SG Muslims for Eid’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்திய குமாரி நூர் மஸ்தூரா வீட்டில் நடந்த விருந்தில் அமைச்சர் உள்ளிட்ட பலரும் களிப்பு. படம்: ஃபேஸ்புக்/ ஜனில் புதுச்சேரி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon