ஜூரோங் வட்டாரத்தில் புதிய சைக்கிள் பாதை

ஜூரோங் ஈஸ்ட், சீனத் தோட்டம், லேக்ஸைட் ஆகிய பகுதிகளை இணைக்கும் 15 கிலோமீட்டர் தூர சைக்கிள் பாதை கட்டமைப்பு நேற்று காலை ஜூரோங் லேக் வட்டாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு முழுமையான சைக்கிள் பாதை கட்டமைப்பைக் கொண்ட எட்டாவது இடமாக இது திகழ்கிறது. புதிய பாதையினால் மக்கள் ஜூரோங் லேக் தோட்டங்களையும் அங்கிருந்து தாமான் ஜூரோங் வரையில் பூங்கா இணைப்புக்கள் மூலம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளலாம்.

அனைத்து வீவக குடியிருப்புகளிலும் முழுமை யான சைக்கிள் பாதை இணைப் புகளைப் படிப்படியாக உருவாக்கும் நிலப் போக்குவரத்தின் நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த புதிய ஜுரோங் வட்டார சைக்கிள் பாதை. இதன் மூலம், ஜூரோங் ஈஸ்ட், லேக்ஸைட், சீனத் தோட்டம் எம்ஆர்டி நிலையங் களிலும் கூடுதலாக 600க்கும் மேற்பட்ட சைக்கிள் நிறுத்துமிடங் கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இவ்வட்டார சைக்கிள் பாதை கட்டமைப்பு அருகில் உள்ள தாமான் ஜூரோங் பகுதியின் சைக்கிள் பாதை கட்டமைப்புடன் இணைக்கப்படும். சைக்கிளோட்டிகளுக்காக இந்த சைக்கிள் பாதை கட்டமைப்பில் பாதுகாப்பு நடவடிக் கைகளும் அமலாக்கப்பட்டுள்ளன.

ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தின் புதிய சைக்கிள் பாதை கட்டமைப்பை நேற்று துணைப் பிரதமரும் ஜுரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மன் சண்முகரத்னம் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கிட்டத்தட்ட 500 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உலக நிதி ஆளுமை, பொதுச் சேவைத்துறை ஆகியவற்றுக்கு ஆற்றிய பங்குக்காக உயரிய தலைமைத்துவ விருது பெற்றார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம். படம்: புளூம்பெர்க்

19 Oct 2019

மூத்த அமைச்சர் தர்மனுக்கு தலைமைத்துவ விருது

‘சிறப்பு தலைமைத்துவச் சேவை விருதை’ மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்திற்கு அனைத்துலக நிதிக் கழகம் வழங்கியது. படம்: புளூம்பெர்க்

18 Oct 2019

அனைத்துலகப் பொருளியலுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக தலைமைத்துவ விருது