வெற்றிகரமாக நடைபெற்ற தமிழ் முரசின் ‘ஃபுட்சால்’ போட்டி

வில்சன் சைலஸ்

‘தமிழ் முரசு’ நாளிதழின் ஏற் பாட்டில் சிறுவர்களுக்கான ‘ஃபுட் சால்’ காற்பந்துப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. பத்து வயது முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறாருக்காக முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் காற்பந்துப் போட்டியில் மொத்தம் 22 குழுக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றன. பெற்றோர், நண்பர்களுடன் உட்லீ பார்க்கில் உள்ள ‘தி அரினா’ திடலுக்குக் காலை சுமார் 8.30 மணிக்கெல்லாம் வந்துவிட்ட சிறுவர்கள், கொளுத்திய வெயிலையும் அவ்வப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் மும்முரமாக ஈடு பட்டனர். வெற்றிப்பெற்ற ‘யங் கப்ஸ்’ குழுவுக்கு ‘எஸ்.சந்திரதாஸ்’ கிண்ணத்துடன் $1,200 பெறுமான முள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப் பட்டன.

முன்னாள் காற்பந்து நட்சத் திரங்களான வி.சுந்தரமூர்த்தி, டெர்ரி பத்மநாதன், எஸ். சுப்பிரமணி, தமிழ்மாறன், டி.ராமு ஆகியோரின் வருகையும் சிறுவர் களை உற்சாகப்படுத்தியது. மேலும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், நாடாளுமன்ற உறுப்பினர் களான டியோ செர் லக், பிரித்தம் சிங் ஆகியோர் அடங்கிய நாடாளுமன்ற அணிக்கும் முன்னாள் காற்பந்து நட்சத்திரங்களுக்கும் இடையே சிறப்புக் காற்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. “ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதற்கு இதுபோன்ற விளையாட்டு நிகழ்ச் சிகள் உதவுகின்றன,” என்றார் திரு டான்.

“சகோதரத்துவம், விட்டுக்கொ டுத்தல் ஆகிய நற்பண்புகள் வளர விளையாட்டுகள் உதவும்,” என்றார் தமிழ் முரசு நாளிதழின் இணை ஆசிரியரும் ‘ஃபுட்சால்’ காற்பந்துப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான திரு வீ. பழனிசாமி. தமிழ் முரசு நாளிதழின் தலைவரும் இலங்கைக்கான சிங்கப்பூர் தூதருமான திரு எஸ் சந்திரதாஸ், “சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது,” என்று கூறினார். தமிழ் நாளிதழ் ஏற்பாடு செய்த போட்டியில் அனைத்து இனத்த வரும் பங்கேற்றதில் பெருமிதம் கொண்டார் சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் தலைவர் லிம் கியா தோங். தமிழர் பேரவையின் ஆதரவுடன் இந்த ‘ஃபுட்சால்’ போட்டி சிறப்பாக நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற ‘யங் கப்ஸ்’ அணியின் தலைவரிடம் வெற்றிக் கிண்ணத்தைக் கொடுக்கும் தமிழ் முரசின் தலைவர் திரு எஸ்.சந்திரதாஸ். படம்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் ‘செந்தோசா சென்சரிஸ்கேப்’. 37 மீட்டர் உயர செந்தோசா மெர்லயனைக் கண்டு ரசிக்க வரும் அக்டோபர் 20ஆம் தேதியே கடைசி நாள். படங்கள்: செந்தோசா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

விடைபெறும் செந்தோசா மெர்லயன்

அங் மோ கியோவிலுள்ள புளோக் 224ல் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றுக்கு மின்னேற்றம் செய்யப்படும் வேளையில் அது திடீரென தீப்பிழம்பாக வெடித்து அந்த வீட்டையே எரியச் செய்தது. (படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்திசெய்யாத மின்ஸ்கூட்டர்களைத் திருப்பிக் கொடுப்போருக்கு $100 சன்மானம்

வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட படம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

வெள்ளிக்கிழமை காலை காற்றுத்தரம் மேம்பட்டது