‘அமைச்சர் நிலைக் குழுவுக்கு நிபந்தனை விதிப்பதில்லை’

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பான அமைச்சர் நிலை குழுவிற்கோ அந்தக் குழுவின் உறுப்பினர் களுக்கோ தான் எந்த நிபந்தனை களையும் விதிப்பதில்லை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். அந்தக் குழுவினர் கேட்டுக் கொள்ளும்போது மட்டும் தன் உடன்பிறப்புகள் செய்வதைப்போல, குழுவினருடன் தான் எழுத்து மூலமாக தொடர்புகொள்வதாக திரு லீ குறிப்பிட்டார். சொந்த நலன் குறித்த பிரச் சினை என்று வரும்போது அத் தகைய ஒரு பிரச்சினையைக் கையாளுவதற்கு இதுவே சரியான, முறையான வழி என்றார் அவர். திரு லீ நேற்று நாடாளுமன்றத் தில் அமைச்சர்நிலை அறிக்கை யைத் தாக்கல் செய்து உரையாற் றினார். பிரதமர் லீ சியன் லூங் ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பில் தன் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துகிறார் என்றும் அந்த வீடு தொடர்பில் அமைச்சர்நிலை குழுவை அமைத்தது அத்தகைய செயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் லீயின் உடன் பிறப்புகளான லீ சியன் யாங்கும் டாக்டர் லீ வெய் லிங்கும் தெரி விக்கிறார்கள்.

எண் 38 ஆக்ஸ்லி ரோட்டில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் திரு லீ குவான் இயூவின் வீடு. இந்த வீட்டை இடிப்பதன் தொடர்பில் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் அவருடைய உடன்பிறப்புகளுக்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டுள்ளது. கோப்புப்படம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon