பிரதமர் லீ: குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என நாடாளுமன்றத்தில் நிரூபணம்

பிரதமர் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தாயிற்று, இனி மீண்டும் நாம் நமது பணிகளைக் கவனிக்கும் நேரம் வந்துவிட்டது என்று நாடாளுமன்றத்தில் இரு நாட்களாக நடந்த விவாதத்தை முடித்து வைத்த பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இதில் தகவல்கள் முன்வைக்கப்பட்டு தகுந்த விளக்கங்கள் தரப்பட்டு விட்டதாக அவர் கூறினார். அரசாங்கம் எவ்வாறு செயல் படுகிறது, ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பாக என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் வெளிப்படையாக தெரிவிக்கப் பட்டு அவற்றில் உண்மையில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டன.

“அதிகாரத்தை நானோ எனது தலைமையிலான அரசோ தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதைப் பொதுமக்கள் காணலாம்,” என பிரதமர் கூறினார். பிரதமரின் உடன்பிறப்புகள் கடந்த இரு வாரங்களாக எண் 38, ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பாக திரு லீ சியன் லூங் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒரு ரகசிய அமைச் சர்நிலைக் குழுவை ஏற்படுத்தி இருப்பதாகவும் தங்களது தந்தை யின் விருப்பப்படி அந்த வீட்டை இடிப்பதில் இடையூறு செய்து வரு வதாகவும் குற்றம் சாட்டியிருந் தனர்.

இவை தொடர்பான சந்தேகங்களை நாடாளுமன்ற விவாதம் தீர்த்துவிட்டதால் இனி நிலைமை அமைதிபெறும் என்று திரு லீ கூறினார். எனினும், “இப்பிரச் சினைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என எதிர்பார்க்க முடியாது. எனது உடன்பிறப்புகள் இனிமேல் என்னென்ன அறிக்கை கள், குற்றச்சாட்டுகள் சுமத்துவர் என்று எனக்குத் தெரியாது.

ஆனால், இதுவரை வெளிவந்து உள்ள அறிக்கைகள், நாடாளு மன்ற விவாதம் ஆகியவற்றின் பயனாக சிங்கப்பூரர்கள் உண்மை நிலை என்னவென்று தெரிந்து கொண்டு இந்தப் பிரச்சினையின் தன்மையைப் புரிந்துகொள்வர். “நாட்டில் கவனிக்கப்பட வேண் டிய பிரச்சினைகள், பொறுப்புகள் ஆகியவற்றிலிருந்து நமது கவனம் சிதறாமல் இனி கவனம் செலுத்த வேண்டிய பணிகளுக்கு நாம் திரும்பலாம்,” என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

தற்காப்புக்காக குற்றாவளிகளைத் தாங்கள் சுட்டதாகவும்  போலிசார் கூறினர். படங்கள்: ஊடகம்

06 Dec 2019

மருத்துவரை எரித்துக் கொன்ற அதே இடத்தில், கைதான நால்வரும் ‘என்கவுன்டர்’; கொண்டாடிய பெண்கள்

N-nitrosodimethylamine (NDMA) என்று அழைக்கப்படும்  நைட்ரசமைன் வேதியியல் மாசு மூன்று மெட்ஃபார்மின் மருந்துகளில் இருப்பதாகவும் அவை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமாக இருப்பதாகவும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

05 Dec 2019

புற்றுநோயை ஏற்படுத்தும் மாசு இருப்பதால் நீரிழிவுக்கான 3 மருந்துகள் மீட்பு