சாங்கி விமான நிலையம் முனையம் 4ஐ பார்க்க வாய்ப்பு

சாங்கி விமான நிலையத்தின் புதிய நான்காவது முனையம் திறக்கப்படுவதற்கு முன் சிங்கப்பூரர்கள் ‘போடிங் பாஸ்’ எனப்படும் அனுமதி அட்டைகளைப் பெற்று அந்த விமான நிலையத்தின் உள்ளே சென்று தங்களுடைய பைகளுக்கு எப்படி முகவரியைப் பொருத்துவது என்பதையெல்லாம் நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம். அங்கு இருக்கும் தீர்வை இல்லா கடைகளில் அவர்கள் பொருட்களை வாங்கலாம். புதிய முனையத்தின் பொது வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் அந்தப் பொது வரவேற்பு நிகழ்ச்சி செயலி மூலம் பலவற்றையும் தெரிந்துகொள்ள முடியும். அந்தச் செயலி வழியாக சென்று விமான நிலையத்தின் பல அம்சங்களையும் காண 90 நிமிடங்கள் வரை பிடிக்கும். பொது வரவேற்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 7 முதல் 20 வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். இலவச நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவு இணையத்தில் நேற்றே தொடங்கிவிட்டது.