‘ஜி20’ மாநாடு: ஜெர்மனியில் மெர்க்கல்-பிரதமர் லீ சந்திப்பு

பெர்லின்: சிங்கப்பூரும் ஜெர் மனியும் தற்காப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இரு நாடுகளும் இணையப் பாதுகாப்பு ஒத்துழைப்பில் கையெழுத்திட வும் சம்மதித்துள்ளன. மேலும் புதிய அம்சங்களான ஆய்வு, மேம்பாட்டுத் துறை, நிதித் தொழில்நுட்பம், விளை யாட்டு ஆகியவற்றிலும் இரு நாடுகளும் ஒத்துழைக்கத் தயா ராக உள்ளன என்று பெர்லின் சென்றிருக்கும் பிரதமர் லீ சியன் லூங், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் தாம் கடைசியாக ஜெர்மனிக்கு வந்ததிலிருந்து இன்று பல வகைகளிலும் இரு நாட்டு ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, இந்த ஆண்டில் இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான அரசதந்திர உறவின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன என்றும் கூறினார். ஜெர்மனியும் சிங்கப்பூரும் நெருங்கிய பங்காளித்துவ உறவு முறையைக் கொண்டுள்ளது. இதற்கு பரந்த, ஆழமான ஒத்துழைப்பு அடிப்படை என்று திரு லீ குறிப்பிட்டார். "இதில் மிகவும் முக்கியமாக, நாங்கள் இருவரும் பல பிரச்சி னைகளில் ஒத்த கருத்து கொண்டுள்ளோம்.

மேலும் எங்கள் இருவருக்கும் உத்திபூர்வமாக சிந்திக்கும் மனப்போக்குள்ளது. "நாங்கள் இருவரும் வெளிப்படையான அனைத்துலக வர்த்தக முறையை, சட்ட நடைமுறை, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சி ஆகியவற்றில் வலுவான கடப்பாடு கொண்டுள்ளோம். இதேபோல் ஜெர்மன் பிரதமர் டாக்டர் மெர்க்கல் இரு நாடுகளும் பலதரப்பு உறவு களை வலுப்படுத்த வேண்டும் என்றும் வர்த்தக வழி முறைகளை கட்டிக்காக்க வேண்டும் என்றும் தெரிவித் தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!