சுடச் சுடச் செய்திகள்

$16.2 மில்லியன் செலவில் பழுதுபார்ப்பு, பராமரிப்பு மையம்

சாங்கி விமான நிலையத்தில் தரைப்பணிகளைக் கையாளும் ‘டிநாட்டா’ dnata நிறுவனம், தரைப்பணி சாதனங்களுக்காக $16.2 மில்லியன் செலவில் புதிய பழுதுபார்ப்பு, பராமரிப்பு மையத் தைத் திறந்திருக்கிறது. சாங்கி விமானச் சரக்கு நிலை யத்தில் ‘டிநாட்டா’ சரக்கு நிலை யத்திற்குப் பக்கத்தில் அமைந் துள்ள 6,900 சதுர மீட்டர் பரப் பளவு கொண்ட மையம், ஓராண்டில் சராசரியாக 9,000க்கும் மேற்பட்ட பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிக ளைக் கையாளும். தற்போதைய மையத்தைவிட இது பெரும் மேம்பாடு என்று புதிய மையத்தின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் நிறுவனம் நேற்று குறிப்பிட்டது.

தற்போதைய மையம் செயல்படத் தொடங்கி 36 ஆண் டுகளுக்கு மேலாகிறது. ஜூன் மாதம் செயல்படத் தொடங்கிய புதிய மையத்தில், தற் போதைய மையத்தைவிடக் கூடுத லாக 1,000 சதுர அடி பரப்பளவு இடம் உள்ளது. அதிலுள்ள புதிய சாதனங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் மையத்தின் கொள்ளளவு மும்மடங்கு அதிகம். புதிய பராமரிப்பு மையத்தில் ‘டிநாட்டா’ நிறுவனத்தின் 320க் கும் மேற்பட்ட மோட்டாரில் இயங் கும் தரைசேவை சாதனங்களும் 1,200 மோட்டார் இல்லாத சாதனங்களும் பராமரிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்தது. புதிய மையத்தில் தற்போதைய பராமரிப்பு, பழுதுபார்ப்புப் பணிக் கும் வருங்கால விரிவாக்கத்திற்கும் போதுமான இடமுண்டு.

சாங்கி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ‘டிநாட்டா’ (dnata) பராமரிப்பு, பழுதுபார்ப்பு நிலையத்தை நேற்று பார்வையிட்டார் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (இடமிருந்து 4வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon