ஐந்து தொழில்துறைகளில் வேலை தேட அதிக உதவி

வேலை தேடுவோருக்கு வளர்ச்சி கண்டு வரும் ஐந்து தொழில் துறைகளில் வேலை கிடைக்க உதவும் வகையில் அதிக முயற் சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர்களைப் பொருத்தமான வேலைகளுடன் இணைக் கும் முயற்சிகள் அமைச்சர்களின் மேற்பார்வையில் இடம்பெறும் என்றும் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித்துள்ளார். அந்த ஐந்து தொழில்துறை களும் தொழில்நுட்பக் கோளாறு களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அதே நேரத் தில் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு ஏராளமான சாத்தியங்கள் இருப்ப தாகவும் திரு லிம் குறிப்பிட்டார். மூத்த துணை அமைச்சர்கள் நால்வருடன் சேர்ந்து இந்த முயற்சிகளுக்குத் தலைமையேற்க உள்ளார் மனிதவள இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ. சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் சுகாதாரப் பராமரிப்புத் துறையை மேற்பார்வை செய்வார்.

அதுபோல, தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தகவல் தொடர்பு, ஊடகத் துறையையும் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ பூ கூன் மொத்த விற்பனை வர்த்தகத் துறையையும் சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா நிதிச் சேவைகள், நிபுணத் துவ சேவைகள் துறைகளையும் மேற்பார்வை செய்வர். தொழில்துறை மாற்றங்கள் இப்போது வேலை தேடுபவர்களை எவ்வகையில் பாதிக்கிறது என்பதையும் புதிய வேலைகளுக்காக அவர்களுக்கு எப்படி மறுபயிற்சி அளிப்பது போன்றவை குறித்து அரசாங்கம், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவை ஆராயும் என்றும் அமைச்சர் லிம் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக, வேறு துறைக்கு மாற வகைசெய்யும் ‘அடாப்ட் அண்ட் குரோ’ திட் டத்தை அவர் குறிப்பிட்டார்.

பாய லேபாரில் உள்ள வாழ் நாள் கற்றல் மையத்தில் செய்தி யாளர்களிடம் பேசியபோது அமைச்சர் லிம் இந்த விவரங் களைத் தெரிவித்தார். மனிதவளத்தை அதிகம் சாராத பொருளியல் வளர்ச்சிக் காகக் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற் சிகள் நல்ல பலனை அளிக்கத் தொடங்கியிருப்பதாக அவர் சொன்னார்.

வாழ்நாள் கற்றல் நிலையத்தின் ‘கரியர்ஸ் கனெக்ட்’ மையத்தில் வேலைதேடுவோர் சிலருடன் உரையாடும் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே (வலமிருந்து 2வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்