360 கோணத்தில் யுடியூப் வழி நேரடி ஒளிபரப்பு

இவ்வாண்டின் தேசிய நாள் கொண்டாட்டம் வெவ்வேறு கேம ராக்கள் வழியாக 360 கோணத்தில் யுடியூப் வழியாக ஒளிபரப்பப்படு வதால் பார்வையாளர்கள் வீட்டில் இருந்தவாறே காட்சிகளை நேரடி யாக ரசிக்க முடியும். வானத்திலிருந்து தரையிறங் கும் ‘ரெட் லயன்ஸ்’ வீரர்கள், அதிவேகத்தில் பாயும் படகுகள் போன்ற சாகசக் காட்சிகளும் பார்வையாளர்களுக்கு உண்மை யான அனுபவத்தைத் தரும். மூன்று இடங்களிலிருந்து மூன்று கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகள் ஒருங் கிணைக்கப்படுகிறது. இதற்காக பார்வையாளர் அரங்கம், புரோமனேட், மேடை ஆகிய இடங்களில் கோணங்களி லிருந்து கேமராக்கள் இயக்கப்படு கின்றன. யுடியூப்பில் ஒளியேற்றுவதற்காக தேசிய நாள் கொண்டாட்டத்தின் வழக்கமான விருப்ப காட்சிகளான வான்குடை வீரர் சாகசம், வாண வேடிக்கை உள்ளிட்ட அங்கங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப் பட்டுள்ளன. மொத்தம் ஆறு அங்கங்கள் தயாராக உள்ளன.

தோ பாயோவில் நேற்று விஆர் முகக் கண்ணாடி வழியாக தேசிய நாள் காட்சிகளை ரசித்த பொதுமக்களில் சிலர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon