சுடச் சுடச் செய்திகள்

கூடுதல் மூத்தோர் உதவிகளுடன் முன்னோடித் தலைமுறை தூதுவர்கள்

சிங்கப்பூரின் முன்னோடித் தலை முறை தொகுப்பு மூத்தோர் நல்ல உடல் நலத்துடன் வாழ அதிகமாக உதவிபுரியும். வீடு வீடாகச் செல் லும் தொண்டூழியர்கள் முதியோ ரைச் சந்தித்து இதனைத் தெரி விக்க உள்ளனர். முன்னோடித் தலைமுறை தூது வர்கள் என்று அழைக்கப்படும் அத்தகைய 3,000 தொண்டூழியர் கள் மூத்த குடிமக்களை சுகாதாரப் பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்வர். இதர மூத்தோருடன் இணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அவர்கள் உற்சாகப் படுத்துவர். அத்துடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் தோழமைத் தொடர்பை ஏற்படுத்து மாறு மூத்தோரை அந்தத் தூது வர்கள் ஊக்குவிப்பர்.

இந்தப் புதிய தொண்டூழியக் கடமைகள் மூத்தோருக்கான சமூகக் கட்டமைப்புத் திட்டத்தின் விரிவாக்கமாக இடம்பெற்றுள் ளன. அவர்கள் தங்கள் இல் லங்களிலேயே நல்ல முறையில் மூப்படைய உதவுவதற்கான இந்த முன்னோடித் திட்டம் சுகாதார அமைச்சும் முன்னோடித் தலை முறை அலுவலகமும் இணைந்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தெம்பனிஸ் குழுத் தொகுதி, மரின் பரேட் குழுத் தொகுதி, சுவா சூ காங் குழுத் தொகுதி ஆகியவற்றைச் சேர்ந்த 300 முன் னோடித் தலைமுறை தூதுவர்கள் தொடக்கமாக இத்திட்டத்தில் இணைந்துகொண்டனர். தெம்பனிசில் மட்டும் 200 மூத் தோரை அவர்கள் சுகாதாரப் பரி சோதனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது அந்த மூத் தோர் பங்கேற்ற முதல் சுகாதாரப் பரிசோதனை எனக் கூறலாம்.

தொண்டூழியர் களைப் பாராட்ட ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்ச்சி யில் பங்கேற்ற பிரதமர் லீ சியன் லூங் முன்னோடித் தலைமுறை தூதுவர்களைச் சந்தித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon