நீக்குப்போக்குடன் செயல்பட வாய்ப்புண்டு - வெளிநாட்டு ஊழியர் கொள்கை குறித்து அமைச்சர் லிம் சுவீ சே

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழி யர்களை வேலையில் அமர்த்து வதற்கான விதிமுறை கடுமை யாக்கப்பட்டாலும் தேவையான வெளிநாட்டுத் திறனாளர்களைக் கொண்டுவர நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் பொரு ளியல் அமைப்புகள் நீக்குப்போக் குடன் செயல்பட வாய்ப்பு உள்ளதாக மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே கூறியுள்ளார். எம்ப்ளாய்மண்ட் பாசுக்குத் தகுதி பெற தேவையான குறைந்தபட்ச சம்பளத்துக்கும் குறைவான வருமானத்தைப் பெறும் சில வெளிநாட்டு ஊழியர் களுக்கும் அது வழங்கப் பட்டுள்ளதை அமைச்சர் சுட்டி னார்.

ஆனால் உள்ளூர் ஊழியர் களுக்கு வேலை வழங்குவது தொடர்பாக நியாயமான முறை யில் பரிசீலனை செய்யும் நிறு வனங்களுக்கு மட்டுமே இந்த நீக்குப்போக்குத் தன்மை கிடைக்கும். சிங்கப்பூரில் போதுமான அளவில் இல்லாத, உலகளாவிய நிலையில் அதிகம் தேவைப்படும் திறன் கொண்ட ஊழியர்களை வேலைக்கு எடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு மட்டும் இந்தச் சலுகை கிடைக்கும். உள்ளூர் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தவும் சிங்கப்பூரின் பொருளியலை மாற்றி அமைக்கவும் அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுடன் இந்த அணுகுமுறை ஒத்துப் போவதாக அமைச்சர் தெரி வித்தார். வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்த கலுந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் லிம் உரையாற்றினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!