மே மாதத்துக்குள் டிரம்ப்-=கிம் சந்திப்பு

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை வரும் மே மாதத்துக்குள் சந்திக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக தென்கொரியத் தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க=வடகொரிய உச்ச நிலை மாநாட்டை நடத்த கிம் ஜோங் உன்னின் அழைப்பை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு நிகழ்ந்தால் கொரியத் தீபகற்பத்தில் நிலவும் நெருக்கடி நிலை பெரும் அளவில் விலகக்கூடும் என்றும் அமைதிக்கு அது வழி வகுக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகின் றனர்.

இந்நிலையில், அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தப்போவதாக கிம் ஜோங் உன் உறுதி அளித் துள்ளதாக தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு அலுவலகத் தலைவர் சுங் எய் யோங் வெள்ளை மாளிகையில் கூடிய செய்தியாளர் களிடம் தெரிவித்தார். கொரியத் தீபகற்பத்தை அணு வாயுதமற்ற வட்டாரமாக்க கிம் ஜோங் உன் கடப்பாடு கொண்டிருப் பதாக அவர் கூறியுள்ளார். டிரம்ப்-=கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப் படவில்லை. திட்டமிட்டபடி இந்தச் சந்திப்பு நிகழ்ந்தால் பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபரும் வடகொரியத் தலைவரும் சந்திப்பது இதுவே முதல்முறை.

தென்கொரியத் தொலைக்காட்சியில் அதிபர் டிரம்ப், கிம் ஜோங் உன் பற்றிய செய்தியைப் பார்க்கும் ராணுவ வீரர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!