பிரதமர் லீ: 11 நாடுகள் சாதனை படைத்தன

அண்மையில் கையெழுத்தான பரந்த ஆசிய பசிபிக் பங்காளித் துவ மேம்பாட்டு உடன்பாடு, ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். உலகில் தேசியவாதமும் தன் னைப்பேணித்தனமும் வர்த்தகப் போரும் சூடுபிடிக்கும் ஒரு கால கட்டத்தில், எல்லாருக்கும் வெற்றி கிட்டுவது எப்படி என்பதை இந்த உடன்பாட்டில் தொடர்புடைய 11 நாடுகளும் உலகிற்குக் காட்டி இருக்கின்றன என்று பிரதமர் திரு லீ குறிப்பிட்டார்.

பசிபிக் பங்காளித்துவ உடன்பாடு என்று முன்பு குறிப்பிடப்பட்ட இந்த உடன்பாட்டில் 11 நாடுகளும் கையெழுத்திட்டு சாதனையை நிகழ்த்த நெடுங்காலம் பிடித்தது என்பதையும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் சுட்டிக் காட்டினார். ஆசிய பசிபிக் பங்காளித்துவ மேம்பாட்டு உடன்பாடு இம்மாதம் 8ஆம் தேதி வியாழக்கிழமை சிலி நாட்டில் சான்டியாகோ நகரில் கையெழுத்தானது. ஆஸ்திரேலியா, புருணை, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய 11 நாடுகள் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!