அதிபர் டிரம்ப், தலைவர் கிம் வருகை

அதிபர் டிரம்ப், தலைவர் கிம் வருகை கொரிய தீபகற்பத்தில் அணுஆயுத மிரட் டலை அகற்றி அங்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நேரடியாக சந்தித்துப் பேசுவதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் நேற்று தனித்தனியாக சிங்கப்பூர் வந்து சேர்ந் தார்கள். அந்த இருவரையும் முறையே சாங்கி விமானநிலையத்திலும் பாய லேபார் விமானநிலையத்திலும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இருநாட்டுத் தலைவர்களும் நாளை செவ்வாய்க்கிழமை காலையில் செந் தோசா தீவில் உள்ள கெப்பெல்லா ஹோட்டலில் சந்தித்துப் பேசுகிறார்கள். அதற்கு முன்னதாக அவர்கள் இருவரும் சிங்கப்பூர் பிரதமரைச் சந்திக்கிறார்கள். வடகொரிய தலைவர் கிம்=பிரதமர் லீ சியன் லூங் சந்திப்பு நேற்று நடந்தது. பிரதமர் திரு லீ= அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு இன்று நடக்கிறது.

வடகொரிய தலைவர் கிம் நேற்று பிற்பகல் சுமார் 2.35 மணிக்கு சீனாவுக் குச் சொந்தமான ஏர் சைனா விமா னத்தில் சிங்கப்பூர் வந்தார். திரு கிம் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் போலிஸ் மோட்டார்சைக்கிள் கள் உட்பட 30 வாகனங்களுடன் புறப்பட்டு ஆர்ச்சர்ட் பகுதியில் இருக்கும் செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலுக்குச் சென்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவில் ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமா னத்தில் வந்து சிங்கப்பூர் பாய லேபார் விமானநிலையத்தில் தரையிறங்கினார். அங்கிருந்து அவர், ஷங்கிரி-லா ஹோட்டலுக்குச் சென்றார்.

கனடாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர், "நான் சிங்கப்பூருக்கு புறப்பட்டுவிட்டேன். அங்கு நடக்கும் பேச்சில் வடகொரியாவிற்கும் உலகிற்கும் உண்மையிலேயே அருமையான ஒரு நன்மையைச் சாதிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும்," என்றார். "வடகொரிய அதிபரை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த ஒரு வாய்ப்பு வீணாகிவிடாது என்பதே என்னுடைய நம்பிக்கை," என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் (இடக்கோடி) பாய லேபார் விமானநிலையத்தில் தரையிறங்கியதும் அவரை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அப்போது ஊடகத்தினரை நோக்கி அதிபர் டிரம்ப் கைகாட்டினார். அமெரிக்க அதிபர் இன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்கிறார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!