அமெரிக்க அதிபரை நேரடியாக சந்தித் துப் பேசுவதற்காக சிங்கப்பூர் வந்திருக் கும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், அந்தச் சந்திப்புக்கு முன்னதாக நேற்று இஸ்தானாவுக்குச் சென்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்தார். இரு தலைவர்களும் மொழி பெயர்ப்பாளர் மூலம் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். உச்சநிலை சந்திப்பை ஏற்று நடத்து வதற்காக பிரதமர் லீ சியன் லூங்கிற்கு வடகொரிய தலைவர் நன்றி கூறினார்.
"வடகொரியாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையில் நடக்கும் வரலாற்று முக்கிய உச்சநிலை சந்திப்பில் முழு உலகமும் ஒருமித்த கவனம் செலுத்து கிறது. உங்களுடைய மனப்பூர்வமான முயற்சிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சநிலை சந்திப்பை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை முற்றிலுமாக செய்துமுடிக்க எங்களால் முடிந்துள்ளது. இதற்காக உங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்," என்று வடகொரிய தலைவர் திரு லீயிடம் கூறினார். உச்சநிலை சந்திப்பு வெற்றிபெறும் பட்சத்தில் சிங்கப்பூரில் நடக்கும் இந்தச் சந்திப்பு வரலாற்றில் முக்கியமான இடத் தைப் பிடிக்கும் என்றார் அவர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் லீ, சிங்கப்பூருக்கு வருகை அளித்ததற்காக வும் சிங்கப்பூரில் உச்சநிலை சந்திப்பை நடத்தும்படி சிங்கப்பூரை கேட்டுக் கொண்டதற்காகவும் திரு கிம்முக்கு நன்றி கூறினார்.