அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் வரலாற்று முக்கிய உச்சநிலை சந்திப்பை சிங்கப்பூர் ஏற்று நடத்துவதற் காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு நன்றி தெரிவித்தார். சிங்கப்பூரின் விருந்தோம்பல், நிபு ணத்துவம், தோழமை உறவு ஆகிய வற்றைத் தான் பாராட்டுவதாக அதிபர் குறிப்பிட்டார்.
"நாங்கள் பெரிதும் விரும்பப்படும் சந்திப்பை நடத்தவிருக்கிறோம். எல்லாம் மிகவும் அருமையாக நடந்து முடியும் என்று நினைக்கிறேன். "உங்களுடைய விருந்தோம்பலையும் நிபுணத்துவத்தையும் தோழமை உறவை யும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி," என்று அமெரிக்க அதிபர், சிங்கப்பூர் பிரதமரிடம் இஸ்தானாவில் நேற்று தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க குழுவினரும் திரு லீ தலை மையிலான சிங்கப்பூர் குழுவினரும் இஸ்தானாவில் விருந்துண்டு கலந்துற வாடினர். அதிபர் டிரம்புக்கு ஜூன் 14ஆம் தேதி 72 வயது ஆகிறது.
நேற்று இஸ்தானா சந்திப்பின்போது அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முன்னதாகவே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. சிங்கப்பூரின் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ் ணன், தகவல் தொடர்பு அமைச்சர் எஸ் ஈஸ்வரன், கல்வி அமைச்சர் ஓங் யி காங் முதலானோர் சிங்கப்பூர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
அமெரிக்க குழுவில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருந்தனர். சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகையளித்த அதிபர் டிரம்ப், ஷங்கிரி= லா ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அவர் நேற்று முற்பகல் சுமார் 11.45 மணிக்குத் தன்னுடைய குழுவினருடன் அந்த ஹோட்டலைவிட்டு இஸ்தானா வுக்குப் புறப்பட்டார். 'தி பீஸ்ட்' எனப்படும் அமெரிக்க அதிபரின் அரசாங்க காரில் புறப்பட்ட அவர், நண்பகலுக்கு முன்னதாக இஸ் தானாவைச் சென்றடைந்தார். அதிபரின் வாகன அணியில் 30க்கும் அதிகமான வாகனங்கள் சென்றன.
திரு டிரம்புக்கு ஜூன் 14ஆம் தேதி 72 வயது ஆவதையொட்டி இஸ்தானாவில் கேக் வெட்டி நேற்றே அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. படத்தில் பிரதமர் லீயின் வலப் பக்கம் அமைச்சர்கள் தர்மன் சண்முகரத்னம், சண்முகம், இடப் பக்கம் அமைச்சர்கள் விவியன் பாலகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகியோர் அமர்ந்துள்ளனர். படம்: தொடர்பு தகவல் அமைச்சு