அடுத்த மாதம் புதிதாக ஆறு ரயில்கள் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று எஸ்எம் ஆர்டி நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி நியோ கியன் ஹோங் தெரிவித்து உள்ளார். புதிய பொறுப்பை ஏற்ற அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசி னார். சிங்கப்பூரில் அதிகமா னோர் பயன்படுத்தும் நீண்ட ரயில் தடங்களான வடக்கு= தெற்கு, கிழக்கு=மேற்கு ஆகிய வற்றில் 12 புதிய ரயில்கள் சேர்க்கப்பட இருப்பதாகக் குறிப் பிட்ட அவர், எஞ்சிய ஆறு ரயில்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சேவையில் விட திட்டமிட்டிருப்பதாகச் சொன் னார். தற்போது இவ்விரு தடங் களிலும் 186 ரயில்கள் சேவை யில் உள்ளன.
புத்தம்புது அம்சங்கள் அந்த ரயில்களில் இடம்பெறும். குறிப் பாக, உச்சநேரங்களில் அதிக பயணிகள் வந்தாலும் அதற் கேற்ப இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட குளிரூட்டிகள் என்பதும் அந்த அம்சங்களில் ஒன்று. மேலும், ஒவ்வொரு ரயி லிலும் உச்சநேரத்தின்போது சுமார் 100 பயணிகள் அதிகமாக நிற்பதற்கு வசதி ஏற்படுத்தும் வகையிலான மடக்கு இருக்கை களும் புதிய ரயில்களில் இருக் கும்.
புதிதாகப் பொறுப்பேற்ற எஸ்எம்ஆர்டி தலைமை நிர்வாக அதிகாரி நியோ கியன் ஹோங் (இடமிருந்து இரண்டாவது) போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுடன் (இடக்கோடி) ரயிலில் பயணம் செய்து புதிய ரயில்கள் குறித்து கேட்டறிந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்